TERMS & CONDITIONS FOR
தங்க குபேரா தங்க சேமிப்பு திட்டம்
1) இத்திட்டம் குறைந்தபட்சம் ₹ 500, ₹ 1000 , ₹ 2000 , ₹ 5000 , ₹ 10000 என ஐந்து பிரிவுகளைக் கொண்ட 12 மாத திட்டம்.
2) இத்திட்டத்தில் தாங்கள் சேமிக்கும் தொகை ரொக்கமாக மட்டும் வரவு வைக்கப்படும்.
3) இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் ரொக்கமாகவோ அல்லது ஆன்லைன் (MOBILE-APP) முலமாக பணம் செலுத்தலாம் மாத தவணைகளை காலம் தாழ்த்தி செலுத்தகூடாது.
4) இத்திட்டத்தில் 12 மாதங்கள் பணம் கட்டி முடித்த பின் 13-வது மாதம் தங்க நகைகள் மற்றும் கல்பதித்த தங்க நகைகளை 15 % வரை உற்பத்தி செலவுமற்றும் செய்கூலி இல்லாமல் வாங்கிகொள்ளலாம், (கல்பதித்த தங்க நகைகளுக்கு கல் கூலி உண்டு).
5) இத்திட்டத்தில் 12 மாதம் பணம் கட்டி முடிந்த பின் தங்க நகை வாங்கும் பொழுது அன்றைய விலைக்கு நகை வழங்கப்படும்.
6) வைரம் மற்றும் விலை மதிப்பற்ற கல் நகைகள் இத்திட்டத்திற்கு உட்கொள்ளப்படாது.
7) இத்திட்டத்தில் சேர்த்து வைத்திருக்கும் தொகைக்கு மேலாக எடுக்கும்கூடுதலான தங்கத்திற்கு மட்டும் உற்பத்தி செலவு (VA) வசூலிக்கப்படும்.
8) முழுமையாக 12 மாதங்கள் கட்ட முடியாவிடில் திட்ட சலுகைகளை உற்பத்தி செலவு (VA) இல்லாமல் பெற இயலாது மேலும் 12 மாத தவணையை 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கவேண்டும், தவறினால் திட்டத்திலிருந்து நீக்கப்படுவீர்.
9) இத்திட்டத்தில் வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ராசிக்கற்கள் பதித்த நகைகள் பொருந்தாது எக்காரணத்தை கொண்டும் பணமாக திருப்பி தரப்படமாட்டாது.
10) இத்திட்டத்தில் தொடர்ந்து கட்டமுடியாத பட்சத்தில் தாங்கள் கட்டியபணத்தை ரொக்கமாக பெற இயலாது, மேலும் தாங்கள் ஏதேனும் பரிசு பெற்றிருந்தால் அதற்குண்டான தொகை போக மீதமுள்ள ரொக்கத்திற்கு தங்க நகைகளை வாங்கி கொள்ளலாம்.
11) இத்திட்டத்திலிருந்து ஏற்கனவே உள்ள மற்ற திட்டங்களுக்கு மாற இயலாது மேலும் தவணைக்கால முடிவில் ஏதேனும் விசேஷ சலுகைகள் மற்றும் விலை தள்ளுபடி கிடையாது, இத்திட்டம் பிரத்தியோகமானது வேறு எந்த சலுகைகளுடன் இணைக்கப்படமாட்டாது.
12) அரசு நிர்ணயத்துள்ள வரி வசூலிக்கப்படும். ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின் போது பணம் மாறமல் மற்றும் தாமதம் ஏற்பட்டாலோ நிர்வாகம் பொறுப்பேற்காது.